தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றுவதே பாதுகாப்பானது : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

தினகரன்  தினகரன்

டெல்லி: தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றுவதே பாதுகாப்பான மற்றும் விரைந்து நிறைவேற்றுவதற்கான வழிமுறை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றுவது என்பது கண்ணியத்துடன் உயிரிழக்கும் உரிமையை மீறுவதாக இருப்பதாகவும், இந்த முறைக்கு தடை விதிக்க கோரியும் உச்சநீதிமன்றத்தில் ரிஷி மல்ஹோத்ரா என்ற வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக பிரமானப்பத்திரம் தாக்கல் செய்துள்ள மத்திய அரசு துப்பாக்கியால் சுடுவது, மின்சாரம் அல்லது ஊசி செலுத்தி தண்டனை அளிக்கும்போது அதிக வலி ஏற்படக்கூடும். மேலும் அவை மனிதநேயமற்றது என்று தெரிவித்துள்ளனர். எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தூக்கிலிடுவதற்கு பதில் வேறு முறையை பின்பற்றகோரிய வழக்கில் மத்திய அரசு இவ்வாறு பதில் அளித்துள்ளது.

மூலக்கதை