கலப்பு திருமணத்தை ஊக்குவிக்க வேண்டும்: சந்திரபாபு நாயுடு பேச்சு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கலப்பு திருமணத்தை ஊக்குவிக்க வேண்டும்: சந்திரபாபு நாயுடு பேச்சு

அமராவதி: கலப்பு திருமணத்தை ஊக்குவிக்க வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.   ஆந்திராவில் ஏழை பெண்கள் திருமண திட்டத்தை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கொண்டு வந்துள்ளார். அவரது பிறந்தநாளையொட்டி, நாளை இத்திட்டம் அமலுக்கு வருகிறது.

ஏழை பெண்கள் பயன்படுவது மட்டுமின்றி, கலப்பு திருமணத்தை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். இதற்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்யும் மணமகனுக்கு ஊக்கத்தொகையாக ரூ. 75,000  வழங்கப்பட உள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் சாதி மாறி திருமணம் செய்து கொண்டால் ரூ. 50,000 ஊக்கத்தொகையும், மாற்றுத்திறனாளி தம்பதியினருக்கு ரூ. 1 லட்சம் ஊக்கத்தொகையும் இத்திட்டத்தின்கீழ் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுaகையில், ‘‘ஏழைகளுக்கு திருமண செலவு என்பது கடினமானதாக உள்ளது.

ஏழை குடும்பங்களுக்கு உதவி செய்யும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சமுதாயம் முன்னேற கலப்பு திருமணம் அவசியம்.

கலப்பு திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில், மணமக்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது’’ என்றார்.



.

மூலக்கதை