அமித்ஷா மகன் அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றம் புது உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமித்ஷா மகன் அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றம் புது உத்தரவு

புதுடெல்லி: அமித்ஷா மகன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இருதரப்பும் பேசி தீர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பா. ஜ தேசிய தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா குஜராத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

மத்தியில் பாஜ ஆட்சிக்கு வந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு இந்நிறுவனம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளதாக ‘த வயர்’ என்ற இணையதள பத்திரிகை செய்தி வெளியிட்டது. இது உண்மைக்கு புறம்பானது.

அடிப்படை ஆதாரமற்றது. ரூ. 100 கோடி நஷ்டஈடு தரவேண்டும் என்று அந்த பத்திரிகையின் ஆசிரியர் ரோகினி சிங் உள்ளிட்டவர்கள் மீது ஜெய்ஷா குஜராத் கோர்ட்டில் ஒரு அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று  பத்திரிகை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை குஜராத் ஐகோர்ட் நிராகரித்து விட்டது.

இதனைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் குஜராத் கோர்ட்டு இந்த வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்தது.

இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கை இருதரப்பு மூத்த வக்கீல்களும் உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.

வழக்கு இறுதி விசாரணைக்காக ஜூலை முதல் வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

அதுவரை இடைக்கால உத்தரவு நீடிக்கும் என்று உத்தரவிட்டனர்.

.

மூலக்கதை