எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டம் சத்தீஸ்கர் பாஜ அரசு திடீர் பல்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டம் சத்தீஸ்கர் பாஜ அரசு திடீர் பல்டி

ராய்ப்பூர்: எஸ்சி. , எஸ்டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு போலீசாருக்கு அனுப்பிய சுற்றறிக்கைகளை ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில அரசுகள் திரும்பப் பெற்றுக் கொண்டன.

எஸ்சி. , எஸ்டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசு அதிகாரிகள் மீது கொடுக்கப்படும் புகார்களின் அடிப்படையில் அவர்களை விசாரிக்காமல் கைது செய்யக் கூடாது என்று உத்தரவிட்டது.

மேலும், இந்த விவகாரத்தில் நேர்மையான அதிகாரிகளை பாதுகாக்க, சில வழிகாட்டு நெறிமுறைகளையும் உச்ச நீதிமன்றம் வழங்கியது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக நாடு முழுவதும் தலித் அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. இதன் விளைவாக, மேற்குறிப்பிட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே, எஸ்சி. , எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு, ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநில அரசுகள், காவல்துறையினருக்கு கடந்த 6-ம் தேதி சுற்றறிக்கைகளை அனுப்பியிருந்தன.

இதற்கு அந்த மாநிலங்களின் தலித் மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனைத் தொடர்ந்து, இந்த சுற்றறிக்கைகளை உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில அரசுகள் அறிவித்தன.

மேலும், இந்த சுற்றறிக்கைகள் தங்களின் கவனத்துக்கு கொண்டு வரப்படாமல் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

.

மூலக்கதை