விபின் ராவத் தலைமையில் ராணுவ உயர் அதிகாரிகள் மாநாடு: டெல்லியில் இன்று தொடங்கியது

தமிழ் முரசு  தமிழ் முரசு
விபின் ராவத் தலைமையில் ராணுவ உயர் அதிகாரிகள் மாநாடு: டெல்லியில் இன்று தொடங்கியது

புதுடெல்லி: டெல்லியில் ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்கும் மாநாடு இன்று காலை தொடங்கியது. 6 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு ராணுவ தலைமை தளபதி விபின் ராவத் தலைமை ஏற்றார்.

ராணுவம் எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்பட இருக்கிறது. முக்கியமாக பாகிஸ்தான் மற்றும் சீனாவால் எல்லையில் ஏற்பட்டு வரும் பிரச்னைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட இருக்கிறது.   இது தொடர்பாக ராணுவ செய்தி தொடர்பாளர் அமன் ஆனந்த் கூறியதாவது: நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் இந்த மாநாட்டில் மேற்கொள்ளப்படும்.

எதிர்காலத்தில் எந்தெந்த வகைகளில் அச்சுறுத்தல்கள் ஏற்படும், அவற்றை எவ்வாறு எதிர்கொண்டு சமாளிப்பது உள்ளிட்டவைகள் குறித்து திட்டமிடப்பட இருக்கிறது.

 இது தவிர ராணுவத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பை மேம்படுத்துவது, தீவிரவாதிகளை எதிர்கொண்டு முறியடிப்பது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட இருக்கிறது.

இவ்வாறு ஆனந்த கூறினார்.
கடந்த ஆண்டு சிக்கிம் அருேக டோக்லாம் பகுதியில் சீன ராணுவத்தால் பிரச்னை வந்த போது, இந்திய ராணுவம் உடனடியாக அங்கு படை பலத்தை அதிகரிப்பதில் பிரச்னை ஏற்பட்டது. எல்லையில் பல இடங்களில் சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருந்ததே இதற்கு காரணம் எனக்கூறப்பட்டது.

இதை தொடர்ந்து சீன எல்லையில் சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலைகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

.

மூலக்கதை