கர்நாடகா தேர்தல்: மகனுக்காக தொகுதி மாறுகிறார் சித்தராமையா

தினமலர்  தினமலர்
கர்நாடகா தேர்தல்: மகனுக்காக தொகுதி மாறுகிறார் சித்தராமையா

புதுடில்லி: அடுத்த மாதம் நடைபெற உள்ள கர்நாடக மாநில சட்டை சபை தேர்தலில் மகனுக்காக தொகுதி மாறுகிறார் மாநில முதல்வர் சித்தராமையா.
கர்நாடக மாநிலத்தில் சட்சபைக்கான தேர்தல் மே 12-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. 15ம் தேதி தேர்தல் முடிவு வெளியாக உள்ளது. இதனையடுத்து 224 தொகுதிகளை கொண்ட தொகுதிகளில் 218 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. வேட்பாளர் பட்டியலில் மாநில முதல்வராக உள்ள சித்தராமையா மற்றும் அவரது மகன் யதீந்திராவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து வருணா தொகுதியில் இருந்து வெற்றி பெற்று வந்த சித்தராமையா இந்த தேர்தலில் தனது சொந்த தொகுதியை தனயனுக்காக தற்போது விட்டு கொடுத்துள்ளார். அவரது மகன் யதீந்திரா தற்போது வருணா தொகுதியில் போட்டியிட உள்ளார். தொடர்ந்து சித்தராமையா மைசூரு மாவட்டத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட உள்ளார். தற்போது உள்ள எம்.எல்ஏக்களில் 14 பேருக்கு சீட் வழங்கப்பட வில்லை. அதே நேரத்தில் காங்., தலைவர்களின் வாரிசுளுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக கிட்டூர் மாவட்டத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் தேசிய தலைவர் அமித்ஷா பேசுகையில் பா.ஜ. அலையால் மிரண்டு போன காங். முதல்வர் சித்தராமையா வருணா சட்டசபை தொகுதியில் இருந்து சாண்டீஸ்வரி தொகுதிக்கு ஓட்டமெடுத்துவிட்டார் என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை