காவிரி விவகாரத்தில் உச்ச நீத்திமன்ற தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது: கர்நாடக அரசு தகவல்

தினகரன்  தினகரன்

பெங்களூரு: காவிரி விவகாரத்தில் உச்ச நீத்திமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு செய்யப்போவது இல்லை என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இன்று கர்நாடக முதல்வர் சித்தராமையா நடத்திய எம்.பி.,க்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு திட்டத்தை வகுத்து நீர் விடவேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நீர் பங்கீடு தொடர்பான திட்டத்தை மத்திய அரசிடம் கர்நாடக அரசு அளித்துள்ளது. தமிழகம், கர்நாடகம், புதுவை, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையே காவிரி நீர் பங்கீடு தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதற்கு கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நீர் வளத் துறை செயலாளரிடம் தங்களது எதிர்ப்பை கர்நாடக அரசு தெரிவித்துவிட்டது. இந்நிலையில் இன்று அனைத்து கட்சி எம்பிக்களுடன் பெங்களூரில் முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும் காவிரி வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்வதில்லை என்றும் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் உள்ளிட்ட சட்டநிபுணர்களின் ஆலோசனையை ஏற்று முடிவு செய்யப்பட்டது.

மூலக்கதை