மறைந்த புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் வாழ்க்கை வரலாறு

PARIS TAMIL  PARIS TAMIL
மறைந்த புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் வாழ்க்கை வரலாறு

புதிய பார்வை தமிழில் வெளியாகும் ஒரு சிற்றிதழ். தமிழ் நாட்டில் சென்னையிலிருந்து மாதம் இருமுறை வெளியாகிறது. இதன் வெளியீட்டாளர் டாக்டர் ம. நடராசன் (சசிகலா நடராஜன்). 1992-99 காலகட்டத்தில் வெளியாகி பின் நின்று போன இந்த இதழ் மீண்டும் 2004ல் தொடங்கி தற்காலம் வரை வெளியாகி வருகிறது.

இதில் கலை, இலக்கியம், சமூகவியல், அரசியல் பற்றிய கட்டுரைகளும், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், கவிதைகள், புத்தக விமர்சனங்கள், நடப்பு நிகழ்வுகள் ஆகியவையும் வெளியாகின்றன.

நடராஜன் திருமணம்

திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த சசிகலாவிற்கும் தஞ்சாவூரை அடுத்த விளார் கிராமத்தைச் நடராஜனுக்கும் 1970-ம் ஆண்டு கருணாநிதி  தலைமையில் திருமணம் நடைபெற்றது. நடராஜனுக்கு ஏ.பி.ஆர்.ஓ வேலை போட்டுக்கொடுத்ததும் கருணாநிதிதான்.

மக்கள் தொடர்புத்துறை அதிகாரியாக நடராஜன்

1980-ம் ஆண்டு தென் ஆற்காடு மாவட்டத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக நடராஜன் பணியாற்றினார். சந்திரலேகா ஐ.ஏ.எஸ் மூலம் ஜெயலலிதாவுடன் நடராஜனுக்கு அறிமுகம் கிடைத்தது. 1985-ல் ஜெயலலிதா நேரடி அரசியலுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர் நடராஜன்.

1991-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியை பிடிக்க முக்கிய காரணமாக இருந்தவர் நடராஜன். 1967-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் தொடர்புத்துறை அதிகாரியானார் நடராஜன்.

ஜெயலலிதாவுடன் நட்பு

எம்.ஜி.ஆர் முதல்வர் ஆன பின்னர் 1982ல் ஜெயலலிதா கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் சுற்றுப்பயணத்தை வீடியோ எடுத்துக் கொடுத்த வினோத் வீடியோ விசன் மூலம் வேதா நிலையத்திற்குள் அடி எடுத்து வைத்தார் சசிகலா.

ஜெயலலிதா உடன் நட்பு ஏற்பட்டது. சாதாரணமாக வேதா நிலையத்திற்குள் போன சசிகலா நிரந்தரமாகவே வேதா நிலையத்தில் தங்கிவிட்டார். பாதுகாப்பு அரண் 1984ல் சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது தமிழகம் முழுவதும் ஜெயலலிதா உடன் பிரசாரத்தில் வலம் வந்தார். ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பாக தனது தம்பி திவாகரனையும் உடன் அழைத்து வைத்தார்.

சசிகலா-நடராஜன் பிரிவு

நடராஜன் பிரிவு ஜெயலலிதாவிற்கு அனைத்து அரசியல் ஆலோசனைகளையும் தருவது நான்தான் என்று நடராஜன் எங்கோ, எப்போதோ சொன்னதாக தகவல் எட்ட அதுமுதல் நடராஜன் - ஜெயலலிதா இடையே பிரச்சினை வெடித்தது.

கணவரா, தோழியா என்ற கேள்வியில் தோழிதான் என்று முடிவெடுக்கிறார் சசிகலா. அதுமுதல் கணவன் மனைவி உறவை விட நட்புதான் முக்கியம் என்பதை நிரூபித்து மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலாலிதாவுடன் தங்கி விட்டார் சசிகலா.

சொந்த ஊரில் உடல் தகனம்

இந்நிலையில்  மார்பு பகுதியில் நோய்த்தொற்று ஏற்பட்டு மார்ச் 16ல், சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தும், நடஜரானின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது.

இன்று(மார்ச் 20) நள்ளிரவு நடராஜன் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, எம்பாமிங் செய்வதற்காக ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இன்று காலை 7 மணி முதல் சென்னை பெசன்ட் நகர் வீட்டில் நடராஜன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. காலை 11 மணிக்கு அவரது உடல் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
 

மூலக்கதை