தமிழகத்தை போல் ஆந்திராவை மாற்ற விடமாட்டேன்: பாஜ அரசுக்கு சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகத்தை போல் ஆந்திராவை மாற்ற விடமாட்டேன்: பாஜ அரசுக்கு சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை

திருமலை: ஆந்திர மாநில இந்து அறநிலையத்துறை மற்றும் கலாசார பண்பாட்டு துறை சார்பில் விஜயவாடாவில் யுகாதி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

விழாவில் முதல்வர் பேசியதாவது:மத்திய அரசு ஆந்திர மாநிலத்தையும், மக்களையும் பலவீனப்படுத்த முயற்சி செய்கிறது. தமிழக அரசியலை போன்று இங்கும் தன்னுடைய பங்களிப்பை கொண்டு வர முயற்சிக்கிறது.

எக்காரணத்தை கொண்டும் இதுபோல நடக்க விடமாட்டேன். மத்திய அரசு நினைத்தது நடக்கவிட்டால் தலைமையை பலவீனப்படுத்தும் விதமாக செயல்படுகிறது.

ராஜ்யசபா சாட்சியாக உறுதியளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை அமல்படுத்த வேண்டும் என கேட்டால் எதிர்தாக்குதல் நடத்துகின்றனர்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தங்கள் மீதுள்ள வழக்குகளை தள்ளுபடி செய்வதற்காக தற்போது பாஜவுடன் சேர்ந்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகள் அமைதியாக இருந்த நடிகர் பவன் கல்யாண் மத்திய அரசு தூண்டுதலின்பேரில் நமது உரிமையை மத்திய அரசிடம் இருந்து பெறாமல் என் மீது பழி சுமத்தி வருகிறார்.
எனவே அனைத்தையும் எதிர்கொள்ளும் வகையில் ெதலுங்கு மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.

என்னை அலட்சியப்படுத்தினால் அது மாநில வளர்ச்சியையும், மாநில மக்களையும் பாதிக்கும். வளர்ச்சியை நோக்கி செல்லும் நிலையில் பாஜ நம்மை வைத்து அரசியல் ஆதாயம் பார்க்க முயற்சி செய்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

.

மூலக்கதை