சுங்கச்சாவடி ஊழியரை அடித்து உதைத்த பா.ஜ. எம்.எல்.ஏ.

தினமலர்  தினமலர்
சுங்கச்சாவடி ஊழியரை அடித்து உதைத்த பா.ஜ. எம்.எல்.ஏ.

ஜெயப்பூர்: சுங்கச்சாவடியில் வாகன கட்டணம் கேட்ட ஊழியரை பா.ஜ. எம்.எல்.ஏ. அடித்து உதைத்த வீடியோகாட்சி வைரலாக பரவியுள்ளது

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தைச்சேர்ந்த பா.ஜ. எம்.எல்.ஏ. ஜீத்மல் காந்த், பட்ஹாலியா என்ற பகுதியில் உள்ள நான்குவழிச்சாலை வழியாக காரில் சென்ற போது அங்கிருந்த சுங்கச்சாவடியில் ஊழியர்கள் வாகன கட்டணம் கேட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் ஊழியரை அடித்து தாக்கியுள்ளார். இது அங்கிருந்த சி.சி.டி. கேமிராவில் பதிவாகியுள்ளது. அதன் காட்சிகள் சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியுள்ளது.இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி. கூறுகையில், சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடி ஊழியர் போலீசில் புகார் கூறவில்லை. புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மூலக்கதை