அமெரிக்காவில் நடைமேடை பாலம் இடிந்து விபத்து:4 பேர் பலி

தினமலர்  தினமலர்

புளோரிடா: அமெரிக்காவில் நெடுஞ்சாலை குறுக்கே கட்டப்பட்டிருந்த நடை மேடை பாலம் இடிந்து விழுந்ததில் பலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
அமெரிக்காவி்ன் புளோரிடாவின் தெற்கு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் புளோரிடா சர்வதேச பல்கலை.யையும், எதிரே மாணவர் விடுதியையும் இணைக்கும் 174 அடி நீள நடைமேடை பாலம் கட்டப்பட்டுள்ளது. நேற்று இப்பாலம் திடீரென இடிந்து சாலையில் குறுக்கே விழுந்தது. இந்த விபத்தில் பலர் சிக்கி பலியாயிருக்கலாம் என கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்து மீட்பு பணியில் இறங்கியுள்ளனர். பாலம் இடிந்ததையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மூலக்கதை