முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்

தினமலர்  தினமலர்
முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்

மும்பை : விதிமுறைகளை மீறி, முன்னாள் ஜனாதிபதி, பிரதிபா பாட்டீலின் மகளுக்கு, ஆண்டுக்கு ஒரு ரூபாய் வாடகைக்கு, அரசு நிலம் ஒதுக்கப்பட்டது குறித்து, மஹாராஷ்டிர மாநில பொதுக் கணக்கு குழு கேள்வி எழுப்பி உள்ளது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட, பொதுக் கணக்கு குழுவின் அறிக்கையில், 2009ல், விதிமுறைகளை மீறி, ஆண்டுக்கு ஒரு ரூபாய் வாடகையில், முன்னாள் ஜனாதிபதி பிரதிபாவின் மகளுக்கு, நிலம் ஒதுக்கப்பட்டது அம்பலமாகி உள்ளது.

அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த, 2009ல், ஜனாதிபதியாக இருந்த பிரதிபா, தன் மகள் ஜோதி ரதோர் நடத்தும் அறக்கட்டளை சார்பில், ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிக் கூடம் நடத்துவதற்கு, புனே மாவட்டத்தில், அரசுக்கு சொந்தமான நிலம் வழங்கப்பட்டது.
மற்றொரு இடத்தில், 3.5 லட்சம் சதுரடி நிலம் ஒதுக்கப்பட்டது. இதற்கு, ஆண்டு வாடகையாக ஒரு ரூபாய் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டது. மஹாராஷ்டிராவில், காங்., தலைமையிலான ஆட்சி நடந்த போது, இந்த நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை