விமானப்படை பயிற்சி விமானம் நொறுங்கியது

தினகரன்  தினகரன்

ஐதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் ஐதராபாத் அருகே உள்ள ஹாக்கிம்பத்தில் விமானப்படை தளம் உள்ளது. இங்கிருந்து நேற்று காலை கிரண் பிரிவை சேர்ந்த விமானம், வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டது. ஆனால், சிறிது நேரத்திலேயே விமானப்படை தளத்தில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள சித்திபேட் என்ற இடத்தில் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. அதன் விமானி, பாராசூட் மூலம் குதித்து காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2 மாதத்தில் விபத்தில் சிக்கி நொறுங்கிய, கிரண் பிரிவை சேர்ந்த 2வது விமானம் இது.

மூலக்கதை