டெல்லி மாநில அரசில் ஆளுநருக்கே கூடுதல் அதிகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வக்கீல் வாதம்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: டெல்லி மாநில அரசின் நிர்வாகத்தில் ஆளுநருக்கே கூடுதல் அதிகாரம் உள்ளது என டெல்லி ஐகோர்ட் அண்மையில் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் சிக்ரி, கான்வில்கர், சந்திரசூட், அசோக்பூஷன் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த பெஞ்ச் முன் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மனிந்தர் சிங் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் கூறியதாவது: டெல்லி மாநில அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பதால் அவர்களின் ஜனநாயக உரிமைக்காக போராடுவதாக டெல்லி அரசு கூறுகிறது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்படவில்லை. டெல்லியில் அதிகம் வாழும் மக்கள் பேசும் மொழியையே ஆட்சி மொழியாக பயன்படுத்த வேண்டும். எனினும் இந்த முடிவை எடுக்கும் அதிகாரம் டெல்லி அரசிடம் இல்லை். சுப்ரீம ்கோர்ட் ஏற்கனவே அளித்த தீர்ப்புகளின் அடிப்படையில் தான் ஆளுநருக்கு அதிக அதிகாரம் இருப்பதாக ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இந்திய அரசியல் அமைப்பு சட்டம், தேசிய தலைநகர் டெல்லி பிரதேச சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் டெல்லி அரசின் நிர்வாகத்தை கட்டிக் காக்கும் அதிகாரம் ஜனாதிபதி, மத்திய அரசு, ஆளுநர் ஆகியோருக்கே உள்ளது என்பது தெளிவாகிறது என்றார். இதையடுத்த வழக்கு நவம்பர் 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

மூலக்கதை