ஏழைகள் நலம் பெற புதிதாக 15 திட்டங்கள்: மத்திய அரசு முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஏழைகள் நலம் பெற புதிதாக 15 திட்டங்கள்: மத்திய அரசு முடிவு

புதுடெல்லி: ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் குறைந்த பட்சம் 15 புதிய நல திட்டங்களை அமல்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக டெல்லி வட்டாரங்கள் கூறியதாவது:ஏழை மக்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான சிறந்த திட்டங்கள் குறித்து யோசனைகளை தெரிவிக்குமாறு அனைத்து அமைச்சகங்களுக்கும் அண்மையில் பிரதமர் அலுவலகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

முக்கியமாக கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்த அரசுகள் மேற்கொண்ட நலத்திட்டங்களின் பயன்களை விட அதிக பயன் அளிக்கும் திட்டங்களை தயாரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நலத் திட்டங்களை செயல்படுத்துவதுடன் அதனை அனைவரும ்தெரிந்து கொள்ளும் அளவுக்கு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.  

பிரதமரின் வீட்டு வசதி திட்டம், அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் அளிக்கும் திட்டம், நேரடி மானிய திட்டம், இலவச சமையல் காஸ் திட்டம், இலவச வங்கி கணக்கு ஆகியன இதில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலவச கேஸ் திட்டத்தின் கீழ் இதுவரை 3 கோடி குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன. 30 கோடி ஏழை மக்களுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

அடுத்த 2 ஆண்டுகளில் இப்போதுள்ள சாதனைகளை விஞ்சும் அளவுக்கு மேலும் சில மக்கள் நல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த இருக்கிறது.

.

மூலக்கதை