பாகிஸ்தான் பலவீனமான நாடு அல்ல பரூக் அப்துல்லா மீண்டும் சர்ச்சை பேச்சு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாகிஸ்தான் பலவீனமான நாடு அல்ல பரூக் அப்துல்லா மீண்டும் சர்ச்சை பேச்சு

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா கைப்பற்றுவதை கைகளில் வளையல் பூட்டிக் கொண்டு பாகிஸ்தான் வேடிக்கை பார்த்துக் ெகாண்டிருக்க அது பலவீனமான நாடு அல்ல என காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தம் என பரூக் அப்துல்லா அண்மையில் பேசியிருந்தார்.

இதற்கு பல முனைகளிலிருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன. குறிப்பாக பாஜ தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கடுமையாக விமர்சித்தார்.

அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய பீகார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் சர்ச்சை கருத்ைத அப்துல்லா தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக உரி பகுதியில் தேசிய மாநாட்டு கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்கே சொந்தம் என குரல் எழுப்பப்பட்டு வருகிறது. எத்தனை காலத்துக்கு இதனை நாம் கூறிக் கொண்டிருக்க போகிறோம்.

ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஒன்றும் தகப்பன் வீட்டு சொத்து கிடையாது. அதில் உரிமை கோரவும் முடியாது.

அந்த பகுதி பாகிஸ்தானுடையது. இது நிதர்சனமான நிலை.

சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தியாவின் சொத்தாக இருந்தால் இன்னமும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஏன் கைப்பற்றவில்லை.

இந்தியா அந்த பகுதியை கைப்பற்றுவதை கை கட்டி நின்று வேடிக்கை பார்க்க பாகிஸ்தான் ஒன்றும் பலவீனமான நாடு அல்ல. கைகளில் வளையல் பூட்டிக் கொண்டு அமைதி காக்கும் நாடும் அல்ல.

அவர்களிடம் சக்தி வாய்ந்த அணுகுண்டுகள் இருப்பதை மறந்து விடக்கூடாது. இவ்வாறு பரூக் பேசினார்.

இதற்கு பாஜ மற்றும் இந்துத்துவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

.

மூலக்கதை