தேசிய பத்திரிகை தினம் பிரதமர் மோடி வாழ்த்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
தேசிய பத்திரிகை தினம் பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: தேசிய பத்திரிகை தினத்தையொட்டி, பத்திரிகையாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தொடங்கப்பட்ட நவம்பர் 16ம் தேதி (இன்று), தேசிய பத்திரிகை தினமாக கொண்டாடப்படுகிறது.

தேசிய பத்திரிகை தினத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து  பிரதமர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தேசிய பத்திரிக்கை தினமான இன்று மீடியா நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்முடைய மீடியாக்களின் கடின உழைப்பை பாராட்டுகிறேன். தேசிய, சர்வதேச செய்திகளை வழங்க களத்தில் இறங்கி சோர்வின்றி பணியாற்றும் செய்தி சேகரிப்பாளர்கள், புகைப்பட கலைஞர்களை மிகவும் பாராட்டுகிறேன்.

உரிமைக்கு குரல் கொடுப்பதுடன், உரிமைகள் மறுக்கப்படும்போது அதை விமர்சிக்கும் பணியை மீடியாக்கள் செய்து வருகின்றன.

கடந்த 3 ஆண்டுகளில் தூய்மை இந்தியா திட்டத்துக்கு மீடியா வலிமை சேர்க்கின்றன. மேலும், தூய்மையின் அவசியம் குறித்து மக்களிடம் கொண்டு சேர்க்கிறது.


இன்றைய காலகட்டத்தில் சோஷியல் மீடியாக்கள் அபார வளர்ச்சி அடைந்து வருகின்றன. செல்போன்கள் வழியாக செய்திகள் சென்றடைகின்றன.

இந்த வளர்ச்சியின் மூலம் ஜனநாயக கடமையை ஆற்ற மீடியாக்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும்.  

துடிப்புள்ள ஜனநாயகத்தின் மைல் கல்லாக பத்திரிகை சுதந்திரம் விளங்குகிறது.

அனைத்து விஷயங்களிலும் கருத்துக்களை தெரிவிக்க, பத்திரிகை சுதந்திரம் அவசியம்.

125 கோடி இந்தியர்களின் திறன், பலம், கண்டுபிடிப்பு போன்றவற்றை வெளிகொண்டுவர நம்முடைய மீடியாக்கள் பாடுபட வேண்டும்.

.

மூலக்கதை