போபர்ஸ் பீரங்கி பேர ஊழல்: விசாரிக்க சி.பி.ஐ., திட்டம்

தினமலர்  தினமலர்
போபர்ஸ் பீரங்கி பேர ஊழல்: விசாரிக்க சி.பி.ஐ., திட்டம்

புதுடில்லி : போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் விவகாரம் தொடர்பாக, தனியார், துப்பறியும் நிறுவன தலைவர், மைக்கேல் ஹெர்ஷ்மாம் கூறிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கப் போவதாக, சி.பி.ஐ., கூறியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த, தனியார், துப்பறியும் நிறுவனமான, 'பேர்பேக்ஸ்'சின் தலைவர், மைக்கேல் ஹெர்ஷ்மாம். இவர், போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் தொடர்பாக விசாரணை நடத்துவதை தடுக்க, அப்போதைய பிரதமர், ராஜிவ் தலைமையிலான, காங்., அரசு சதி செய்ததாக குற்றஞ்சாட்டி உள்ளார்.

கடந்த வாரம், டில்லி வந்த மைக்கேல், போபர்ஸ் பேர ஊழலில் பெற்ற பணம், சுவிஸ் நாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டினார்.இந்நிலையில், மைக்கேல் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்கப் போவதாக, சி.பி.ஐ., கூறியுள்ளது.

சி.பி.ஐ., செய்தித் தொடர்பாளர், அபிஷேக் தயாள், வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'போபர்ஸ் ஊழல் விவகாரம் தொடர்பாக, அமெரிக்க துப்பறியும் நிபுணர் மைக்கேல், தனியார் தொலைக்காட்சிகளில் அளித்த பேட்டி விபரங்கள், எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அவர் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை, சி.பி.ஐ., விசாரிக்கும்' எனக் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை