செல்லாத நோட்டு எண்ண 66 மிஷின்கள்

தினமலர்  தினமலர்
செல்லாத நோட்டு எண்ண 66 மிஷின்கள்

புதுடில்லி : செல்லாததாக அறிவிக்கப்பட்ட, பழைய ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணியில், 66 இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாக, ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ரிசர்வ் வங்கி அளித்த பதில்:செல்லாததாக அறிவிக்கப்பட்டு, வங்கிகளில், 'டிபாசிட்' செய்யப்பட்ட, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணியில், 66 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில், ஏழு இயந்திரங்கள், தனியாரிடம் இருந்து, குத்தகைக்கு வாங்கப்பட்டவை; மேலும் ஏழு இயந்திரங்கள், வர்த்தக வங்கிகளுக்கு சொந்தமானவை.

குத்தகைக்கு எடுக்கப்பட்ட இயந்திரங்களுக்கு அளிக்கப்படும் வாடகை விபரத்தை தெரிவிக்க இயலாது.ரூபாய் நோட்டு எண்ணும் இயந்திரம் ஒவ்வொன்றையும், ஐந்து பேர் அடங்கிய குழு இயக்கி வருகிறது. இவ்வாறு செயல்படும் பல குழுக்களுக்கு, ஒரு மேற்பார்வையாளர் பணியில் ஈடுபட்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை