தேர்தல் கமிஷன் விசாரணை: 23-ந்தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு இரட்டை இலை யாருக்கு என்பதில் இழுபறி

PARIS TAMIL  PARIS TAMIL
தேர்தல் கமிஷன் விசாரணை: 23ந்தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு இரட்டை இலை யாருக்கு என்பதில் இழுபறி

முடக்கப்பட்ட அ.தி. மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை யாருக்கு வழங்குவது? என்பது பற்றி தேர்தல் கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அடங்கிய ஒன்றுபட்ட அணியும், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அணியும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்கவேண்டும் என்று கோரி, அதற்கு ஆதரவான ஆவணங்களை தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்து உள்ளன.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி, தேர்தல் கமிஷன் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிற நவம்பர் 10-ந் தேதிக்குள் தனது முடிவை அறிவிக்க இருக்கிறது.

இரட்டை இலை சின்னம் தொடர்பான முதல்கட்ட விசாரணை கடந்த 6-ந் தேதி நடைபெற்றது.

2-ம் கட்ட விசாரணை நேற்று நடைபெற்றது.டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் ஏ.கே.ஜோதி, தேர்தல் கமிஷனர்கள் ஓ.பி.ராவத், சுனில் அரோரா ஆகியோர் தலைமையில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு விசாரணை தொடங்கியது.

நேற்று விசாரணையின் போது இரு தரப்பினருக்கும் இடையே நடந்த விவாதம் மிகவும் பரபரப்பாக இருந்தது. அத்துடன் அடுத்தகட்ட விசாரணையை வருகிற 23-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மூலக்கதை