குர்மித் ராம் வங்கி கணக்கில் ரூ.75 கோடி கண்டுபிடிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
குர்மித் ராம் வங்கி கணக்கில் ரூ.75 கோடி கண்டுபிடிப்பு

சண்டிகர் : அரியானா மாநிலத்தை சேர்ந்த சாமியார் குர்மித் ராம். பெண் சீடர்கள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குர்மித் ராமிற்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

கடந்த ஆகஸ்டு 25ம் தேதியன்று சாமியார் கைது செய்யப்பட்டபோது பெரிய அளவில் வன்முறை வெடித்தது.
இந்நிலையில், குர்மித் ராமின் அசையும், அசையா சொத்துக்களை கணக்கெடுத்து, கலவரத்தின்போது சேதமான பொருட்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அரியானா, பஞ்சாப் நீதிமன்றங்கள் உத்தரவிட்டன.

இதையடுத்து, குர்மித் ராமின் ஆசிரமம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகின்றன. அவரது வங்கி கணக்குகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.



அந்தவகையில், பல்வேறு வங்கிகளில் 473 கணக்குகள் இருப்பது தெரியவந்தது. இந்த கணக்குகளில் ரூ. 75 கோடி இருப்பு உள்ளது.

குர்மித் ராமி பெயரில் உள்ள 12 வங்கி கணக்குகளில் ரூ. 7. 7 கோடியும், அவரது மகள் ஹனிபிரீத்தின் 6 வங்கி கணக்குகளில் ரூ. 1 கோடியும் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. இன்னும் பல்வேறு பெயர்களில் தொடங்கப்பட்டுள்ள வங்கி கணக்குகளை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இதில் பல நூறு கோடி சிக்கும் என தெரிகிறது.


.

மூலக்கதை