விமான படை மார்ஷல் அர்ஜன் சிங் உடலுக்கு இன்று இறுதி சடங்கு

தமிழ் முரசு  தமிழ் முரசு
விமான படை மார்ஷல் அர்ஜன் சிங் உடலுக்கு இன்று இறுதி சடங்கு

புதுடெல்லி : இந்திய விமான படை முன்னாள் தளபதி மார்ஷல் அர்ஜன் சிங் உடலுக்கு இன்று அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெற்றது.
இந்திய விமான படையின் முன்னாள் தளபதியும், ஏர் மார்ஷலுமான அர்ஜன் சிங் நேற்று முன்தினம் திடீரென மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 98.

அவரது இறுதி சடங்கு இன்று காலை 10 மணிக்கு அரசு மரியாதையுடன் நடைபெற்றன. இதை யொட்டி டெல்லியில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களிலும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

இதுகுறித்து உள்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்லியில் உள்ள பிரார் சதுக்கத்தில் அர்ஜன் சிங் உடலுக்கான இறுதி சடங்கு இன்று காலை 10 மணிக்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என அறிவித்திருந்தது. இதை தொடர்ந்து குண்டுகள் முழங்க அர்ஜன் சிங் உடலுக்கு இறுதி சடங்கு நடத்தப்பட்டது.

கடந்த 1965ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரின் போது இந்திய விமான படைக்கு தலைமை தாங்கியவர் அர்ஜன் சிங். அந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது.



60க்கும் அதிகமான போர் விமானங்களில் பணியாற்றியவர் என்ற பெருமை அர்ஜன் சிங்குக்கு உள்ளது. நமது நாட்டு விமான படையை உலகில் உள்ள மற்ற நாடுகளுக்கு இணையாக வலிமை மிக்கதாக மாற்றியதில் அர்ஜன் சிங்கின் பணி மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும் கடந்த,1965ல், அர்ஜன் சிங்கிற்கு, பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.

இந்திய விமானப்படையில், ஐந்து நட்சத்திர அந்தஸ்து உள்ள, விமானப்படை அதிகாரியாக கவுரவிக்கப்பட்ட பெருமை, அர்ஜன் சிங்கிற்கு மட்டுமே உண்டு. மறைந்த இந்திய விமானப் படை முன்னாள் தளபதி, மார்ஷல் அர்ஜன் சிங்கின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோர் நேரில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

.

மூலக்கதை