இ.வி.எம். என்றால் ஓவ்வொரு ஓட்டும் மோடிக்கே : யோகி புது விளக்கம்

தினமலர்  தினமலர்
இ.வி.எம். என்றால் ஓவ்வொரு ஓட்டும் மோடிக்கே : யோகி புது விளக்கம்

லக்னோ: EVM என்பதற்கு ‛Every Vote Modi' என வாக்காளர்கள் தேர்தலில் காட்டிவிட்டார்கள் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத் விளக்கம் அளித்து பேசியுள்ளார். கோரக்பூரில் பா.ஜ. நிர்வாகிகள் மத்தியில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதி்ய நாத் பேசியது, டில்லி உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ. சாதனை வெற்றிபெற்றுள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை கோளாறு சொன்னவர்கள் இப்போது என்ன சொல்வார்கள்.

தேர்தல் முடிவுகள் பல முதல்வர்களை தோல்வியுற செய்துள்ளது. அதில் உ.பி.யில் அகிலேஷ், மயாவதி ஆகியோரை போன்று டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் என பட்டியல் நீளுகிறது. வீழ்ந்தவர்கள் EVM எனப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை குறை கூறினார்கள். அதில் உண்மையில்லை. ‛‛EVM'' என்றால் ‛Every Vote Modi' , இ.வி.எம். என்றால், ஒவ்வொரு ஓட்டும் மோடிக்கே என வாக்காளர்கள் தேர்தல் முடிவுகளை காட்டிவிட்டார்கள் என்று பொருள்படும் என்றார்.

மூலக்கதை