‛தினகரனால் தமிழகத்திற்கு அவமானம்': தமிழிசை

தினமலர்  தினமலர்
‛தினகரனால் தமிழகத்திற்கு அவமானம்: தமிழிசை

சென்னை: தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற தினகரன் தமிழகத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார் என தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.

கைது:


இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு தொடர்பாக தினகரன் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்ததாவது: அதிகாரப்பூர்வமான ஆதாரங்கள் இல்லாமல் கைது செய்ய முடியாது. லஞ்சம் கொடுக்க தினகரன் தரப்பினர் சதி செய்தனர். தினகரன் தரப்பில் குற்றத்தை வைத்துக்கொண்டு பா.ஜ.,வை குறை சொல்வது எவ்விதத்தில் நியாயம்.

வலுவான ஆதாரங்கள்:


தினகரனும், சுகேஷும் தங்களை ஒருவருக்கொருவர் தெரியாது என்று கூறினாலும் இருவரின் தொலைபேசி உரையாடல், பணப்பரிமாற்றம் நடைபெற்றதற்கான சி.சி.டி.வி., ஆதாரங்களுடன் 37 மணி நேர விசாரணைக்கு பின்பு தான், தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் பா.ஜ., மீது குற்றம் சுமத்துவது அடிப்படை ஆதாரமற்றது. பா.ஜ.,வால் தான் ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அவமானம்:


குற்றவாளிக்கு தண்டனை கிடைத்தே ஆக வேண்டும். சட்டம் தன் கடைமையை செய்தே ஆக வேண்டும். தினகரன் தமிழகத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலக்கதை