‛தலாக்' கலச்சாரத்தை ஒழிக்க கோரி பிரதமர் மோடிக்கு கடிதம்

தினமலர்  தினமலர்
‛தலாக் கலச்சாரத்தை ஒழிக்க கோரி பிரதமர் மோடிக்கு கடிதம்

புதுடில்லி: ‛தலாக்' கூறி கணவரால் வீட்டை விட்டு விரட்டி விடப்பட்ட முஸ்லிம் பெண் ‛தலாக்' கலாச்சாரத்தை ஒழிக்க கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

உ.பி., மாநிலத்தை சேர்ந்தவர் சகுப்தா ஷா, இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் மீண்டும் கர்பமாகியுள்ளார். இந்த குழந்தையும் பெண் குழந்தையாக இருக்கூடும் என கூறி இவரது கணவர் சகுப்தாஷாவின் கருவை கலைக்க கூறியிருக்கிறார். அதற்கு சகுப்தாஷா மறுத்ததால் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சகுப்தாஷாவின் கணவர் அவரிடம் 3 முறை ‛தலாக்' கூறி வீட்டை விட்டு விரட்டி விட்டுள்ளார். இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய சகுப்தாஷா, மோசமான தலாக் கலச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் சமயத்தில் தலாக் குறித்து மோடி அளித்த வாக்குறிக்காகவே நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.,விற்கு வாக்களித்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை