விமான ஊழியரை காலணியால் தாக்கிய விவகாரம்: ரவீந்திர கெய்க்வாட் டிக்கெட்டை ரத்து செய்தது ஏர் இந்தியா

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: சிவசேனாவின் சர்ச்சைக்குறிய எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளை ஏர் இந்தியா நிறுவனம் ஒரே நாளில் 2 முறை ரத்து செய்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக மும்பையிலிருந்து டெல்லி செல்வதற்கு ஏர் இந்தியா விமானத்தில் அவர் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். இதனை அந்த நிறுவனம் உடனடியாக ரத்து செய்தது. இதனையடுத்து அவர் ஐதராபாத்திலிருந்து டெல்லி செல்ல டிக்கெட் பதிவு செய்தார். இதனையும் ஏர் இந்தியா ரத்து செய்தததையடுத்து வேறு வழியின்றி அவர் மும்பையிலிருந்து ராஜ்தாணி விரைவு ரயில் மூலம் டெல்லி சென்றடைந்தார். கடந்த வியாழக்கிழமை ஏந் இந்தியா விமானத்தில் பயணித்த ரவீந்திர கெய்க்வாட், தமக்கு இருக்கையில் முன்னுரிமை வழங்கவில்லை எனக்கூறி விமான நிறுவன ஊழியரை காலணியில் தாக்கினார். இதனையடுத்து தங்கள் நிறுவன விமானத்தில் பயணம் செய்ய அவருக்கு அனுமதி வழங்கப்போவதில்லை என்று ஏர் இந்தியா நிர்வாகம் எடுத்த முடிவே அவரது டிக்கெட் மறுக்கப்பட காரணம் என்று கூறப்படுகிறது. தனியார் நிறுவனங்களும் கெய்க்வாட் பயணம் செய்ய மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை