தோனியின் ஆதார் அட்டை விண்ணப்பம் இணையத்தில் வெளியிட்ட விவகாரம்: ரவி ஷங்கர் பிரசாத்திடம் சாக்‌ஷி புகார்

தினகரன்  தினகரன்

ராஞ்சி: கடந்த கால காங்கிரஸ் ஆட்சியின் போது குடிமக்களின் தனிப்பட்ட அடையாளங்களை சேகரித்து ஓரே அடையாள அட்டையாக ஆதார் எனும் அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவெடுத்தது. இதற்கென தனி ஆணையமும் அமைக்கப்பட்டது. தற்போது மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும் குடிமக்களின் தகவல்களை பெறுவதற்கான இ-சேவை மையங்களை நாடு முழுவதும் அமைத்துள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் மகேந்திரசிங் தோனி ஆதார் அட்டை வேண்டி விண்ணப்பித்துள்ளார். இ-சேவை மைய ஊழியர்கள் தோனியின் வீட்டுக்குச் சென்று அவரது தகவல்களை பெற்றனர். தோனி ஆதார் அட்டைக்காக தனது கைரேகையை இயந்திரத்தில் வைத்தது போல புகைப்படம் எடுத்து இ-சேவை மையத்தின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஊழியர்கள், தோனியின் ஆதார் விண்ணப்பத்தையும் வெளிப்படையாக புகைப்படம் எடுத்து டுவிட்டரில் பதிவிட்டனர். இந்நிலையில் தோனியின் ஆதார் விண்ணப்பத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத்திடம் தோனியின் மனைவி சாக்‌ஷி டிவிட்டரில் புகார் அளித்துள்ளார்.

மூலக்கதை