சமாஜ்வாடியின் சட்டப்பேரவை தலைவராக அகிலேஷ் தேர்வு

தினகரன்  தினகரன்

லக்னோ: சமாஜ்வாடி கட்சியின் சட்டப்பேரவை தலைவராக கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் சமாஜ்வாடி கட்சியின் கூட்டம் நடைபெற்றது. எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். கட்சியின் மூத்த தலைவர்கள் அசம்கான், சிவ்பால் யாதவ் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்வில்லை. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஒருமனதாக சட்டப்பேரவை மற்றும் மேலவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக நேற்று முன்தினம் சமாஜ்வாடியின் சட்டப்பேரவை தலைவராக கட்சியின் மூத்த தலைவரான எம்எல்ஏ ராம் கோவிந்த் சவுத்ரியை அகிலேஷ் யாதவ் பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அசம் கான் மற்றும் சிவ்பால் ஆகியோர் சட்டப்பேரவை தலைவர் பதவிக்கான போட்டியாளர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவராலும் அகிலேஷ் ஆதரவை பெற முடியாததால் தோல்வியடைந்தனர். இதனையடுத்து நேற்று நடந்த கூட்டத்தை அவர்கள் புறக்கணித்தனர்.

மூலக்கதை