200-க்கும் அதிகமான அரசு தளங்களில் ஆதார் தகவல்கள் கசிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
200க்கும் அதிகமான அரசு தளங்களில் ஆதார் தகவல்கள் கசிவு

புதுடெல்லி : மத்திய அரசின் 200க்கும் அதிகமான இணையதளங்களில் ஆதார் தகவல்கள் கசிந்துள்ளதாக பார்லி. யில் மத்திய அரசு பகீர் தகவல் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களுக்கான நலத் திட்டங்களுக்கு ஆதார் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. ஆதாரை காரணம் காட்டி மக்களுக்கான நலத்திட்டங்கள், மானியம் ஆகியவை பாதிக்கப்படக் கூடாது என சுப்ரீம் கோர்ட் கூறியிருந்தது.

இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆதார் தகவல்கள் கசிவானதாக பரபரப்பு ஏற்பட்டது. இதை மத்திய அரசு மறுத்து வந்தது.

இந்தசூழலில் நேற்று லோக்சபாவில் இதுகுறித்து நடைபெற்ற விவாதத்தின் போது மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் எலெக்ட்ரானிக் துறை இணை அமைச்சர் பி. பி.

சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருந்தார். அந்த பதிலில் அவர் கூறுகையில்,  ஆதார் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட தகவல்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சொந்தமான 210 இணையதளங்களில் ஆதார் தகவல்கள் கசிந்துள்ளது தெரியவந்துள்ளது.

இவற்றில் பயனாளிகளின் ஆதார் எண் உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் இடம் பெற்றிருந்தன.

தற்போது இது போன்ற தவறுகளை களைவதற்காக ஆதார் நிறுவனம் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இது போன்ற நடவடிக்கைக்கு பிறகு அரசின் இணைய தளங்களில் இருந்து ஆதார் தகவல்கள் நீக்கப்பட்டன என்றார்.

அதே போல் மற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கையில், ஒருவரே பல்வேறு பான் கார்டுகள் வாங்குவதை தடுக்கவும், வரி ஏய்ப்பை தடுக்கவுமே ஆதார் எண், பான் கார்டுடன் இணைக்கப்படுகிறது என்றும் அவர் விளக்கினார்.

.

மூலக்கதை