நடிகையின் ஆபாச வீடியோவை பதுக்கிய விஐபி யார்?

தமிழ் முரசு  தமிழ் முரசு
நடிகையின் ஆபாச வீடியோவை பதுக்கிய விஐபி யார்?

திருவனந்தபுரம் : நடிகை கடத்தப்பட்டு ஆபாசப்படம் எடுக்க பயன்படுத்திய செல்போன் இதுவரை போலீசிடம் சிக்கவில்லை. இந்த செல்போன் கிடைத்தால் போலீசுக்கு முக்கிய ஆதாரமாக அமையும்.

அதுமட்டுமல்லாமல் திலீப்புக்கு எதிரான முக்கிய சாட்சியாகவும் அமையும். நடிகையை தாக்கி ஆபாசபடம் எடுத்த மறுநாள், செல்போன் மற்றும் மெமரிக்கார்டு கொச்சியை சேர்ந்த பிரதீஷ் சாக்கோ என்ற வக்கீலிடம் ஒப்படைத்ததாக பல்சர் சுனில் போலீசிடம் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக பிரதீஷ் சாக்கோ போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. இதையடுத்து அவரை கைது செய்ய போலீசார் திட்டமிட்டிருந்தனர்.

இதை தெரிந்து கொண்டவர் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இன்று விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.

இன்று 11 மணியளவில் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

இதற்கிடையே கொச்சியை சேர்ந்த ஒரு மூத்த வழக்கறிஞர் மூலம் பிரதீஷ் சாக்கோ போலீசாரிடம் தொடர்பு கொண்டு சில முக்கிய தகவல்களை அளித்துள்ளார்.   பல்சர் சுனில் கொடுத்த செல்போன் கிடைத்த உடனடியாக திலீப்பிடம் கொடுக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் திலீப்பை சந்திக்க முடியவில்லை.

ஒரு விஐபியின் பெயரை கூறி அவரிடம் செல்போனை கொடுக்குமாறு திலீப் கூறியுள்ளார். இதையடுத்து பிரதீஷ் சாக்கோ அந்த விஐபியிடம் செல்போனை கொடுத்துள்ளார்.


அந்த விஐபி யார்? என்பது குறித்து மூத்த வக்கீல் மூலம் போலீசிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பிரதீஷ் சாக்கோ கூறிய அந்த விஐபி நடவடிக்கைகளை நேற்று முதல் போலீசார் கண்காணிக்க தொடங்கியுள்ளார்.

இதற்கிடையே பிரதீஷ் சாக்கோவிடம் இருந்து வாக்குமூலத்தை பெற போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவர் வாக்குமூலம் அளித்தவுடன் அந்த விஐபியை கைது செய்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த 6 வருடங்களுக்கு முன் ஆள் மாறாட்டத்தில் முன்னணி தமிழ் நடிகையின் தாயாரை கடத்திய வழக்கில் ஏற்கனவே பல்சர் சுனில் மற்றும் கோதமங்கலத்தை சேர்ந்த எபின் ஆகியோர் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் கண்ணூரை சேர்ந்த வேன் டிரைவர் சுனிஷ், ேகாதமங்கலத்தை சேர்ந்த விபின், திருச்சூரை சேர்ந்த அஷ்ரப் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பல்சர் சுனிலை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க காக்கநாடு குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க நடிகர் திலீப்பின் ஜாமீன் இன்று கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. திலீப்பிற்கு ஜாமீன் மனு கொடுக்க போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று ஏற்கனவே எர்ணாகுளம் எஸ்பி ஏவி ஜார்ஜ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பல்சர் சுனிலின் தாயார் ஷோபனா நேற்று காலடி நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்.

அப்போது திலீப்புடன் தனது மகனுக்கு உள்ள நெருக்கம் உள்பட பல்வேறு முக்கிய தகவல்களை அவர் நீதிமன்றத்தில் கூறியுள்ளதாக தெரிகிறது.

.

மூலக்கதை