திருவனந்தபுரத்தில் ஐ.டி.பெண் ஊழியருக்கு கால்டாக்சியில் பாலியல் தொல்லை: டிரைவர் கைது

தினகரன்  தினகரன்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் டெக்னோ பார்க் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் உள்ள ஒரு ஐ.டி. கம்பெனியில் பணி புரியும் இளம்பெண் ஒருவர் இரவு பணி முடிந்து வீட்டிற்கு புறப்பட்டார். தனியார் கால்டாக்சியில் பயணம் செய்த போது 32 வயது தக்க டிரைவர் அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அப்பெண் அவரை கண்டித்தார். இதனையடுத்து நான் தவறு செய்து விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் என்று டிரைவர் கெஞ்சியுள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்று அந்த கால்டாக்சி நிறுவனத்துக்கு தொடர்பு கொண்டு தனது பயணத்தின் போது கார் டிரைவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து புகார் அளித்தார். ஆனால் இந்த புகாரை அந்நிறுவன அதிகாரிகள் பொருட்படுத்தாமல் விட்டனர்.  இதனையடுத்து, தனக்கு நடந்தது போல் வேறு பெண்களுக்கு நடந்துவிடக்கூடாது என்று எண்ணி, பெண்களுக்காக போராடும் ஒரு அமைப்பிடம் நடந்த சம்பவத்தை கூறினார். அந்த பெண்கள் அமைப்பு இதுபற்றி போலீசாரிடம் புகார் அளித்து டிரைவரை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அவர்களது புகாரின் பேரில் திருவனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கால் டாக்சி டிரைவரை கைது விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மூலக்கதை