மும்பை தாஜ் ஓட்டல் கட்டட படத்திற்கு காப்புரிமை

தினமலர்  தினமலர்
மும்பை தாஜ் ஓட்டல் கட்டட படத்திற்கு காப்புரிமை

மும்பை : டாடா குழுமத்தைச் சேர்ந்த, மும்பை தாஜ் மகால் பேலஸ் ஓட்டல் கட்டடத்திற்கு, படக் காப்புரிமை பெறப்பட்டு உள்ளது. இந்தியாவில், அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பின் கீழ், ஒரு கட்டட வடிவமைப்பிற்கு படக் காப்புரிமை வழங்கப்பட்டு உள்ளது, இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தெற்கு மும்பையில், 240 அடி உயரத்தில், ஏழு மாடிகள், 560 அறைகளுடன் கட்டப்பட்ட இந்த ஐந்து நட்சத்திர ஓட்டல், 1903 டிச., 16ல் திறக்கப்பட்டது.இந்தோ - சரசெனிக் கட்டடக் கலையில், இந்த ஓட்டலின் புகழுக்கு, பெருமை சேர்க்கும் விதமாக, புளோரண்டைன் கோதிக் கலையில் அமைந்துள்ள, பிரம்மாண்டமான குவிமாடம் உள்ளது.

தற்போது, இந்த கட்டட வடிவமைப்பின் படத்திற்கு காப்புரிமை பெறப்பட்டு உள்ளதால், இனி, இந்த ஓட்டல் புகைப்படத்தை, வர்த்தகரீதியில் பயன்படுத்துவதற்கு, ஓட்டல் நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும்.

நீல் ஆம்ஸ்ட்ராங், ஜான் லெனன், பரக் ஒபாமா உட்பட, உலக புகழ் பெற்ற ஏராளமானோர், இந்த ஓட்டலில் தங்கி உள்ளனர். 2008 நவ., 26ல், பயங்கரவாதிகள், இந்த ஓட்டல் மீது நடத்திய தாக்குதலில், 167 பேர் பலியாகினர்.

மூலக்கதை