குடிநீர் வாரியத்தில் ரூ.10 கோடி முறைகேடு : கெஜ்ரிவால் உறவினர் வீட்டில் ரெய்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
குடிநீர் வாரியத்தில் ரூ.10 கோடி முறைகேடு : கெஜ்ரிவால் உறவினர் வீட்டில் ரெய்டு

புதுடெல்லி: டெல்லி குடிநீர் வாரியத்தில் ரூ. 10 கோடி வரை முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் கெஜ்ரிவால் உறவினர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர். ஆம் ஆத்மியில் ஏற்பட்ட பூசல் காரணமாக கபில் மிஸ்ரா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் கெஜ்ரிவால் மீது அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். இதில் குறிப்பாக குடிநீர் வாரியத்தில் கெஜ்ரிவால் உறவினர் சுரேந்திர குமார் பன்சால் ரூ. 10 கோடி வரை முறைகேடு செய்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

சுரேந்திர குமார் பன்சால், கெஜ்ரிவால் மனைவி சுனிதாவின் சகோதரர் ஆவார்.

இதற்கிடையில் கடந்த 7ம் தேதி பன்சால் காலமானார்.

இதனால் கபில் மிஸ்ராவின் பேச்சு குறித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் குடிநீர் வாரியத்தில் நடைபெற்ற ரூ. 10 கோடி முறைகேடு தொடர்பாக ஊழலுக்கு எதிரான தன்னார்வ  நிறுவனம் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இருந்த போதிலும் இந்த வழக்கில் கெஜ்ரிவாலின் பெயர் நேரடியாக குறிப்பிடப்படவில்லை.

பொதுப்பணித்துறை நிதி மோசடி குறித்து விசாரணை நடத்தி வந்த டெல்லி லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சுரேந்திர குமார் பன்சால் வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தினர். அவருக்கு உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளான பொதுப்பணித்துறை அதிகாரிகள் பவன்குமார், கமல்குமார் ஆகியோரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

இவற்றில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் கெஜ்ரிவாலுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை