சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ள பாஸ்வான் இலாகா திடீர் பறிப்பு: கூடுதல் பொறுப்பாக ராதாமோகனிடம் ஒப்படைப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ள பாஸ்வான் இலாகா திடீர் பறிப்பு: கூடுதல் பொறுப்பாக ராதாமோகனிடம் ஒப்படைப்பு

புதுடெல்லி: உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ள மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் இலாகா திடீர் என பறிக்கப்பட்டுள்ளது. மத்திய உணவு வினியோகம் மற்றும் நுகர்வோர் நலன் துறை அமைச்சராக ராம் விலாஸ் பாஸ்வான் பொறுப்பு வகித்து வருகிறார்.

தற்போது அவர் வகித்து வந்துள்ள இலாகா திடீரென பறிக்கப்பட்டுள்ளது. 70 வயதான பாஸ்வானுக்கு உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.



இதுகுறித்து ஜனாதிபதி மாளிகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் வகித்து வந்த நுகர்வோர் நலன் மற்றும் உணவு வினியோகத்துறை ஆகிய பொறுப்புகளை தற்போதைய வேளாண் அமைச்சர் ராதா மோகனிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பாஸ்வான் உடல் நலம் பெற்று திரும்பி வந்து பதவி ஏற்கும் வரை அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதய நோய் பாதிப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ள ராம் விலாஸ் பாஸ்வான் வருகிற ஜூன் 14ம் தேதி வரை அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

.

மூலக்கதை