எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தானுக்கு இந்தியா பாடம் கற்பிக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தானுக்கு இந்தியா பாடம் கற்பிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. சிக்கிமில் பொதுக் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாணப்படும் என பேசினார். பாகிஸ்தான் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தவறினால் இந்தியா மாற்ற வைக்கும் என்றும் அவர் கூறினார். காஷ்மீர் பிரச்னையை வைத்து இந்தியாவை சீர்குலைக்க பாகிஸ்தான் முயல்கிறது என அவர் குற்றம்சாட்டியுள்ளார். காஷ்மீர் நம்முடையது. காஷ்மீர் மக்கள் நம்முடையவர்கள். இந்தியாவை சீர்குலைப்பது ஒன்றே பாகிஸ்தானின் நோக்கம் என்று தெரிவித்தார். ஒரு நாடு மற்றொரு நாட்டை சீர்குலைக்க நினைப்பதை சர்வதேச நாடுகள் பார்த்துக் கொண்டிருக்காது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு தக்க பதிலடி தர வேண்டும் என்றார். இதனிடையே முறையான பயண ஆவணங்கள் இல்லை என குற்றம்சாட்டி மும்பையைச் சேர்ந்த ஷேக் நபி என்பவரை இஸ்லாமாபாத் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானின் இதுபோன்ற செயல்களை தடுக்க இந்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

மூலக்கதை