நானே கண்காணிப்பேன் குறைகளை தெரிவிக்க ‘ஆப்’ பயன்படுத்துங்கள்

தினகரன்  தினகரன்

கெய்சிங்: துணை ராணுவப்படை வீரர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க, உள்துறை அமைச்சகம் சமீபத்தில் தொடங்கிய ‘மொபைல் ஆப்’ பயன்படுத்த வேண்டும் என்று சாஸ்த்ர சீமா பால் துணை ராணுவப்படை வீரர்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்தார். சிக்கிம் மாநிலத்தில் 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ராஜ்நாத் சிங், சீன எல்லையில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை போலீசார், சாஸ்த்ர சீமா பால் ஆகிய துணை ராணுவப்படையினரின் முகாம்களுக்கு சென்று அங்குள்ள வீரர்களிடம் உரையாற்றி வருகிறார். கெய்சிங் பகுதியில் உள்ள சாஸ்த்ர சீமா பால் அமைப்பின் 36வது பட்டாலியனுக்கு நேற்று அவர் சென்றார். வீரர்களுடன் விருந்து சாப்பிட்ட ராஜ்நாத் சிங் அவர்களிடம் பேசுகையில், ‘‘மிகவும் சிக்கலான சூழ்நிலையில் நீங்கள் பாதுகாப்பு பணியை மேற்கொள்வதை நான் பாராட்டுகிறேன். உங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால், அதை உள்துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட மொபைல் ஆப் மூலம் நேரடியாக தெரிவிக்கலாம். நான் ஒவ்வொரு மாதமும் அந்த ஆப்-ஐ சோதனை செய்து, வீரர்களின் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்ப்பேன்’’ என்றார்.

மூலக்கதை