புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் தங்கக் கவசம் அணிவிப்பு: ஆயிரக்கணக்கானோர் தரிசனம்

தினமணி  தினமணி

புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தி உற்சவத்தை முன்னிட்டு புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் திங்கள்கிழமை சுவாமிக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்தது சுவாமியை வழிபட்டனர்.

விநாயகர் சதுர்த்தி உற்சவம் நாடு முழுவதும் திங்கள்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மணக்குள விநாயகர் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 4 மணிக்கு மணக்குள விநாயகருக்கு அபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.

தர்பார் அலங்காரத்தில் உற்சவர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. அதில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.

மூலக்கதை