காஷ்மீரில் அமைதி திரும்பும்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை

தினமணி  தினமணி
காஷ்மீரில் அமைதி திரும்பும்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை

காஷ்மீர்: காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் அமைதி திரும்பும் என்று தான் நம்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் வகையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவினர், பலதரப்பட்ட கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்த காஷ்மீர் சென்றுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பிரிவினைவாதிகள் அழைக்கப்பட்ட போதும், அவர்கள் அதனை நிராகரித்துவிட்டனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், ஹுரியத் தலைவர்கள் காஷ்மீரத்தைத் தான் விரும்புகிறார்களே தவிர, மனித நேயத்தை அல்ல.

அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தையை தவிர்த்திருப்பதன் மூலம், அவர்கள் ஜனநாயகத்தை நம்பவில்லை என்பது தெரிகிறது.

காஷ்மீர் இந்தியவின் ஒரு பகுதி என்பதில் இரு வேறு கருத்துகள் இல்லை. இந்தியாவின் ஒரு பகுதியாகவே காஷ்மீர் தொடர்ந்து இருக்கும். காஷ்மீரில் மீண்டும் அமைதி திரும்ப மத்திய அரசு, மாநில அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் ராஜ்நாத் கூறினார்.

மூலக்கதை