மத உணர்வைப் புண்படுத்திய விவகாரம்: தோனி வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு!
கடவுளை அவமதித்ததாக தோனி மீது தொடரப்பட்ட வழக்கில் அவர் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு வெளியான பிசினஸ் மாத இதழ் ஒன்றில் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியை விஷ்ணு போல சித்தரித்து அட்டைப்படம் வடிவமைக்கப்பட்டிருந்தது. தோனிக்கு பல கைகள் இருப்பது போலவும் ஒவ்வொரு கையிலும் ஒரு வியாபாரப் பொருளை வைத்திருப்பது போலவும் அட்டைப் படம் இருந்தது. இதில் ஷூ ஒன்றும் இடம்பெற்றிருந்தது. ‘God of Big Deals’ என்று கட்டுரைக்குத் தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இந்த விளம்பரம் இந்துக் கடவுளை அவமதிப்பது போல இருக்கிறது என்று சிவசேனா இந்துஸ்தான் அமைப்பை சேர்ந்த ராஜிந்தர் சிங் ராஜா டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக ஆந்திராவிலும் வழக்கு தொடரப்பட்டது. அந்தப் புகைப்படம் ஹிந்து மத உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதாகக் கூறி, ஆந்திரத்தில் உள்ள அனந்தபூர் நகர நீதிமன்றத்தில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் ஷியாம் சுந்தர் மனு தாக்கல் செய்தார்.
இதன் விளைவாக, ஆந்திராவில் உள்ள அனந்தபூர் நீதிமன்றத்தில் தோனி நேரில் ஆஜராகவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அவருக்கு பிணையில் வெளிவர இயலாத பிடியாணை (கைது வாரண்ட்) பிறப்பிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, தோனி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, கடவுளை அவமதித்ததாக தோனி மீது தொடரப்பட்ட வழக்கில் தோனி மீதான குற்றவியல் நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
