உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: சரத்குமார்
உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர்- தலைவர் ஆர்.சரத்குமார் தெரிவித்தார்.
சமத்துவ மக்கள் கட்சியின் தென்மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குற்றாலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நிறுவனர்- தலைவர் ஆர்.சரத்குமார் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுசெயலர் எஸ்.வி.கணேசன், மாநில கலை இலக்கிய அணி செயலர் விவேகானந்தன், வழக்குரைஞரணி செல்வம், மாநில மகளிரணி துணைச் செயலர் பாகீரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் சரத்குமார் கூறியதாவது: நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும். எங்களுடைய கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ள பகுதிகளைக் கண்டறிந்து அப்பகுதியில் போட்டியிட அதிமுக கூட்டணியில் இடங்களை கேட்க உள்ளோம்.அதிமுக அரசு பொறுப்பேற்ற 100 நாள்களில் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றியுள்ளனர். மேலும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சமத்துவ மக்கள் கட்சியின் 10ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோரின் பதிவை புதுப்பிக்கும் பணி வரும் 28ஆம் தேதி முதல் 10 நாள் நடைபெறுகிறது. கட்சி நிர்வாகிகள் இயக்கப் பணிகளை மேற்கொள்வது, பொதுமக்களுக்கு சேவை செய்வது குறித்தும், தங்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையிலும் மாதத்தில் மூன்று நாள்கள் சென்னையில் வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளேன் என்றார் அவர்.
முன்னதாக, தென்மண்டல செயலர் சுந்தர் வரவேற்றார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
