ஏ.ஆர். முருகதாஸின் ‘அகிரா’ பட வசூல்: 2 நாள்களில் ரூ. 10 கோடி!
சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் அகிரா என்கிற ஹிந்திப் படத்தை இயக்கியுள்ளார் ஏ.ஆர். முருகதாஸ். தமிழில் வெளியாகி கவனம் ஈர்த்த மௌன குரு படத்தின் ஹிந்தி ரீமேக் இது. தமிழில் உள்ளதுபோல் இல்லாமல் நாயகியை மையமாக வைத்து கதை மாற்றப்பட்டுள்ளது.
அகிரா கடந்த வெள்ளியன்று வெளியானது. முதல் இரண்டு நாள்கள் கெளரவமான வசூலைப் பெற்றுள்ளது அகிரா. வெள்ளியன்று ரூ. 5.15 கோடியும் சனியன்று ரூ. 5.30 கோடியும் வசூலித்துள்ளது. இரண்டு நாள்களில் ரூ. 10.45 கோடி வசூலைப் பெற்று நல்ல தொடக்கத்தைப் பெற்றுள்ளது அகிரா. இதனால் மகிழ்ச்சியடைந்த முருகதாஸும் சோனாக்ஷி சின்ஹாவும் ட்விட்டரில் வழியாகத் தங்கள் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்கள்.
இதற்குப் பிறகு மகேஷ் பாபுவை கதாநாயகனாகக் கொண்டு தமிழ்-தெலுங்குப் படத்தை இயக்க உள்ளார் முருகதாஸ். அந்தப் படத்தில் வில்லன் வேடத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
