ஈரான் கடல் எல்லையில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களின் அவல நிலை

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
ஈரான் கடல் எல்லையில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களின் அவல நிலை

எல்லைத் தாண்டி மீன்பிடித்தாகக் கூறி கைது செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள், படகிலேயே சிறை வைக்கப்பட்டதால், சரியான உணவு கிடைக்காமல், கடல் நீரை குடித்து வாழ்ந்ததாக எழுதிய கடிதத்தால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 31  மீனவர்கள், குஜராத் மாநிலம் மற்றும் துபாய்  மீனவர்களுடன் இணைந்து, கடந்த நவம்பர் மாதம், ஆஜ்மன், ஷார்ஜா துறைமுகத்திலிருந்து  5 விசைப்படகுகளில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளனர்.  

அவர்கள் துபாய் கடற்கரையில்  மீன்பிடித்து  கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, ஈரான் கடற்படையினர் டிசம்பர் 1 ம் தேதி கைது செய்துள்ளனர். அவர்களை கீரிஸ் என்ற துறைமுகத்தில் படகிலேயே சிறை வைத்துள்ளனர். 

படகிலிருந்த உணவு தீர்ந்துவிட்ட நிலையில், கடந்த ஒரு மாதமாக போதிய உணவு, மருந்து, உடை இல்லாமல் தவித்து வந்துள்ளனர். உணவு கிடைக்காமல், கடந்த ஒரு மாதமாக கடல் நீரை குடித்து உயிர் வாழ்ந்து வருவதாக உறவினர்களுக்கு அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். 

அதனால், மீனவர்களின்  உறவினர்கள்  சோகத்தில்  முழ்கி  உள்ளனர். எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் சிறையில் உள்ள அவர்களை மீட்க  கோரி  பாதிக்கபட்ட  மீனவர்களின்  உறவினர்கள், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சிவானை சந்தித்து  மனு அளித்தனர். 

மூலக்கதை