"போர்க்களத்தில் ஒரு பூ" படத்தின் இயக்குனர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
போர்க்களத்தில் ஒரு பூ படத்தின் இயக்குனர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

போர்க்களத்தில் ஒரு பூ படத்துக்கு தடை கேட்டு இசைப்பிரியாவின் தாயார் மற்றும் சகோதரி தொடர்ந்த வழக்கில் பதிலளிக்குமாறு படத்தின் இயக்குனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில், ஷோபா என்ற இசைப்பிரியா இலங்கை ராணுவத்தினரால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தை மையமாக வைத்து, ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற பெயரில் கே.கணேசன் என்பவர் ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார். 

இது தொடர்பாக இசைப்பிரியாவின் தாயார் டி.வேதரஞ்சனி, மூத்த சகோதரி தர்மினி வாகிசன் ஆகியோர் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் அந்த திரைப்படத்தில், தம்மையும்,  இசைப்பிரியாவையும் போராளிகள் என்று சித்தரித்து உள்ளதாகவும், இந்த திரைப்படம் வெளியானால், தங்கள் குடும்பத்துக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் எந்த ஒரு அடையாளத்தையும் ஊடகங்கள் மூலம் வெளியிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும் என குறிப்பிட்டிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன், இது குறித்து பதிலளிக்கும்படி படத்தின் இயக்குனர் கணேசன், தயாரிப்பாளர் குருநாத் செல்லசாமி ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை பிப்ரவரி 5-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மூலக்கதை