"போர்க்களத்தில் ஒரு பூ" படத்தின் இயக்குனர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
போர்க்களத்தில் ஒரு பூ படத்துக்கு தடை கேட்டு இசைப்பிரியாவின் தாயார் மற்றும் சகோதரி தொடர்ந்த வழக்கில் பதிலளிக்குமாறு படத்தின் இயக்குனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில், ஷோபா என்ற இசைப்பிரியா இலங்கை ராணுவத்தினரால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தை மையமாக வைத்து, ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற பெயரில் கே.கணேசன் என்பவர் ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இது தொடர்பாக இசைப்பிரியாவின் தாயார் டி.வேதரஞ்சனி, மூத்த சகோதரி தர்மினி வாகிசன் ஆகியோர் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் அந்த திரைப்படத்தில், தம்மையும், இசைப்பிரியாவையும் போராளிகள் என்று சித்தரித்து உள்ளதாகவும், இந்த திரைப்படம் வெளியானால், தங்கள் குடும்பத்துக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் எந்த ஒரு அடையாளத்தையும் ஊடகங்கள் மூலம் வெளியிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும் என குறிப்பிட்டிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன், இது குறித்து பதிலளிக்கும்படி படத்தின் இயக்குனர் கணேசன், தயாரிப்பாளர் குருநாத் செல்லசாமி ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை பிப்ரவரி 5-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
