மருத்துவ மாணவியின் இறுதி சடங்கில் பங்கேற்க வந்த இளைஞர் அமைப்பினர் கைது

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
மருத்துவ மாணவியின் இறுதி சடங்கில் பங்கேற்க வந்த இளைஞர் அமைப்பினர் கைது

மருத்துவ மாணவியின் இறுதி சடங்கில் பங்கேற்க வந்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பினரை போலீசார் சென்னையில் கைது செய்தனர். 

விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலம் தனியார் இயற்கை மருத்துவக்கல்லூரி மாணவிகள் 3 பேர் கடந்த 23ந் தேதி தற்கொலை செய்து கொண்டனர். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட மாணவியரில் ஒருவரான மோனிஷாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிந்த பின் சென்னை எர்ணாவூரில் மாணவியின் இறுதி ஊர்வலம் நடக்கிறது.

இதில் பங்கேற்க விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர்  22 பேர் நேற்றிரவு சென்னை வந்தனர். சென்னை நெற்குன்றம் தனியார் திருமண மண்டபத்தில் தங்கியிருந்தனர்.

மாணவியின் இறுதி ஊர்வலத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் பங்கேற்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கருதிய போலீசார், அவர்களை கைது செய்து அதே திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

இந்நிலையில் திருமண மண்டபத்தில் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை