மருத்துவக் கல்லூரி மாணவி மோனிஷாவின் உடல் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
மருத்துவக் கல்லூரி மாணவி மோனிஷாவின் உடல் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது

கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவி மோனிஷாவின் உடல், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மறுபிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

கடந்த 23ம் தேதி எஸ்.வி.எஸ் தனியார் இயற்கை மருத்துவ கல்லூரி மாணவியர் 3 பேர், கிணறு ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, சென்னை எர்ணாவூரை சேர்ந்த மோனிஷா என்ற மாணவியின் உடலை, மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவரது தந்தை, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து, மறு பிரேத பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், மோனிஷாவின் உடலுக்கு இன்று பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. 

மூலக்கதை