2008-ல் சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கு: 21 பேருக்கு சிறைத் தண்டனை

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
2008ல் சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கு: 21 பேருக்கு சிறைத் தண்டனை

2008ல் சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற மோதலில், 21 பேருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதித்து சென்னை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில், கடந்த 2008-ம் ஆண்டு மாணவர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு மாணவர் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், அவர் உள்பட 5 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். 

இதுகுறித்த வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோதல் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், வழக்கறிஞர் ரஜினிகாந்த் உள்ளிட்ட 43 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கு சென்னை 17வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 43 பேரில், 22 பேரை விடுதலை செய்து நீதிபதி கோமதிநாயகம் இன்று உத்தரவிட்டார்.

மூலக்கதை