பீகாரில் இருந்து இன்று நாமக்கல் வரும் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
பீகாரில் இருந்து இன்று நாமக்கல் வரும் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள்

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பீகாரில் இருந்து 860 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று நாமக்கல் கொண்டு வரப்பட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை, தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவிற்காக, 860 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பீகார் மாநிலத்திலிருந்து லாரிகள் மூலம் நாமக்கல் கொண்டு வரப்பட்டது.

நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு இன்று வந்தடைந்த இயந்திரங்களை, மாவட்ட ஆட்சியர் திரு. வ.தட்சிணாமூர்த்தி பார்வையிட்டார். மேலும் நாளை 1,174 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரவுள்ளதாகவும்  வ.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

மூலக்கதை