தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி 8 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி 8 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, சென்னை உட்பட 8 மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆலோசனை நடத்தி வருகிறார். 

சென்னையில் உள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்ட ஆட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 

மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு அறிமுக பயிற்சி, தேர்தலுக்கு பயன்படுத்தும் மென்பொருட்கள் பற்றிய பயிற்சியளிப்பதற்கு என்ன மாதிரியான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என விவாதிக்கப்பட உள்ளது. 

மேலும், தேர்தல் பணியில் இருக்கும் காவலர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்கு அளிப்பது குறித்த ஏற்பாடு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 

கூட்டத்திற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தமிழக சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்னும் ஒரு வாரத்தில் தமிழகம் வந்து சேரும் என தெரிவித்தார்.

மூலக்கதை