​அரசு கல்லூரியில் சேர்க்க எஸ்விஎஸ் கல்லூரி மாணவர்கள் கோரிக்கை

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​அரசு கல்லூரியில் சேர்க்க எஸ்விஎஸ் கல்லூரி மாணவர்கள் கோரிக்கை

எஸ்விஎஸ் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு கல்லூரியில் இடம் ஒதுக்க வேண்டும் என்று அக்கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

கள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் கல்லூரியை சேர்ந்த 14 மாணவர்கள் தங்களது பெற்றோருடன் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழக துணை வேந்தர் கீதா லெட்சுமியை இன்று சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் எஸ்விஎஸ் கல்லூரியை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

அடிப்படை வசதிகளில்லாத கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி அளித்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பி பெற்று தர வேண்டும் எனவும் மாணவர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். அதே போன்று எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவர்களுக்கு அரசு கல்லூரியில் இடம் வழங்க வேண்டும் என்றும் மாணவர்கள்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மாணவர்களின் கோரிக்கை தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என்று மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் கீதா லட்சுமி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை